சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் நேரடியாக முதல்வரிடம் புகார்கள், மனக்குறைகள், தேவைகளைத் தெரிவிக்கவும் அவற்றுக்கு அதிகாரிகள் உடனடியாக செவி சாய்க்குமாறு செய்யவும் 'முதல்வரின் முகவரி' என்ற ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை ஒருங்கிணைப்பு அமைப்பு ஆகிய குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய துறை அமைந்துள்ளதாக அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி துறையில் ஒற்றை இணையத்தள முகப்பு பயன்படுத்தப்பட்டு தீர்வு காணப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

