பவானி: ஈரோடு மாவட்டம், பவானியில் நடிகர் வையாபுரி தொடங்கி வைத்த இட்லி உண்ணும் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று இட்லியை சுடச்சுட சாப்பிட்டு பரிசுத்தொகையை வென்றனர்.
'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் சூரி பரோட்டா சாப்பிட்டு அசத்துவது போல், இட்லி சாப்பிடும் போட்டி பவானியில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 10 நிமிடம் மட்டுமே சாப்பிட அனுமதி தரப்பட்டது. அதன்பிறகு 5 நிமிடங்களுக்கு வாந்தி எடுக்கக்கூடாது என்றும் நிபந்தனை கூறப்பட்டது.
குமாரபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராமலிங்கம் 19 இட்லிகளும் கல்லூரி மாணவர் ரவி 18 இட்லிகளும் மளிகைக் கடை வியாபாரி வில்லியம்ஸ் 15 இட்லிகளும் சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5,000, இரண்டாம் பரிசான ரூ.3,000, மூன்றாம் பரிசான ரூ.2,000ஐ வென்றனர். துரித உண வுக்கு மாற்றாக உடலுக்கு நன்மை பயக்கும் இட்லி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது.