சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டாம் தவணை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நேற்றில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களிடம் அமைச்சர் பேசியபோது, "தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 73 விழுக்காட்டினரும் இரண்டாவது தவணை தடுப்பூசியை 35 விழுக்காட்டினரும் போட்டுள்ளனர்.
"இரண்டாவது தவணை தடுப் பூசியைப் போட்டுக்கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இன்னும் 50 லட்சம் பேர் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி ேநற்று முதல் துரிதமாக நடந்து வருகிறது.
"தமிழகத்தில் 5,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் ெதாடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை ஏழரை லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்," என்று கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 53.43 லட்சம் 'கொவிஷீல்ட்' தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது மாநில அரசிடம் 1.25 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.