தொடர்மழையால் காய்கறிகளின் விலை எகிறின

1 mins read
5a21b78c-fd06-4e57-b097-8e7a918cd539
-

தேனி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழையின் காரணமாக காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின. தொடர் மழையால் கத்தரி செடிகள் அழுகியதால் தேனி மாவட்டம், பெரியகுளத் துக்கு வரும் கத்தரிக்காய் வரத்து குறைந்து ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120க்கு விற்பனையானது. அதேேபால், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. மழை காரணமாக பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்துவிட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் கிலோ ரூ.40க்கு விற்ற கரும்பு முருங்கை நேற்று ரூ.100க்கும் ரூ.27க்கு விற்ற செடிமுருங்கை ரூ.70க்கும் ரூ.23க்கு விற்ற மர முருங்கை ரூ.60க்கும் விற்பனையாகின.