கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும், வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்கவேண்டும், அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும் என ராஜகோபால் அறிவுறுத்தி உள்ளார்.