நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருவதால், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பை சென்னை மாநகரப் போலிஸ் வழங்கியுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’.
ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு வழங்குவோம் என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சூர்யாவின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.