சேலம்: சேலத்தைச் சேர்ந்த 40 வயதான வீரன் என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு மனைவி உமா (35 வயது), மகள் சுஷ்மிதா (13 வயது) ஆகியோருடன் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மூவரும் மீண்டும் பெங்களூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பொன்னேரி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, சாலையோர விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது.
அச்சமயம் காரின் கதவு திறந்து கொண்டதால் வீரனின் மனைவி உமா மட்டும் வெளியே தூக்கி வீசப்பட்டார். வீரனும் அவரது மகளும் காரில் இருந்து வெளியேற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.