50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்

சென்னை: கொவிட்-19 கிரு­மித் தொற்று மக்­கள் மத்­தி­யில் பர­வா­மல் தடுக்க, தமி­ழ­கத்­தில் 50,000 இடங்­களில் ேநற்று 9ஆம் கட்­டத் தடுப்­பூசி முகாம் நடை­பெற்­றது.

சென்­னை­யில் மட்­டும் 2,000 இடங்­களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்தது.

மாநிலம்தோறும் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் இம்­மு­கா­முக்கு வந்து தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொண்­ட­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை நடந்து முடிந்­துள்ள எட்டு முகாம்­களில் 73% பேர் முதல் தவணை தடுப்­பூசி­யை­யும் 35% பேர் இரண்­டாம் தவணை தடுப்­பூசியையும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இம்மாதக் கடைசிக்குள் 100% மக்­க­ளுக்கும் முதல் தவணை தடுப்­பூ­சி­யைப் போட்டுவிட்ட மாநி­ல­மாகத் தமிழ்­நாடு திக­ழும் வகை­யில் தடுப்­பூசி போடும் பணி துரி­த­கதியில் நடந்து வரு­கிறது.

இரு கட்டத் தடுப்­பூ­சி­யை­யும் விரைந்து போட்­டுக்­கொள்­வ­தற்கு ஏது­வாக இனி வாரந்­தோ­றும் வியா­ழன், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் 'மெகா' தடுப்­பூசி முகாம் நடத்­தப்­படும் என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தி­ருந்­தார்.

அதன்படி, "பொது­மக்­க­ளின் வச­திக்­காக அவர்­க­ளின் வீடு­க­ளுக்கு அருகிலேயே வாரத்­தில் இரு நாட்­கள் தடுப்­பூசி முகாம் நடத்தப்படுகிறது.

"இனியும் பொது­மக்­கள் தயங்­கா­மல் உடனடியாக வந்து தடுப்­பூசியைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும்," என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் புதி­தாக 782 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யாகியுள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் இது­வரை இத்­தொற்­றால் மொத்­தம் 27 லட்­சத்து 17 ஆயி­ரத்து 203 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்களில் சென்­னை­யில் மட்­டும் 5 லட்­சத்து 56 ஆயி­ரத்து 649 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தமி­ழ­கம் முழு­வ­தும் இது­வரை தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 26 லட்­சத்து 71 ஆயி­ரத்து 668.

இதுகுறித்து பொது சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்ட அறிக்கையில், "தனி­மைப்­ப­டுத்­து­த­லில் உள்­ள­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 9,211. கடந்த 24 மணி நேரத்­தில் குணமடைந்து 907 பேர் வீடு திரும்பினர். கிருமித்தொற்­றி­னால் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்­நி­லை­யில் மொத்த உயி­ரி­ழப்பு 36,324 ஆக உள்­ளது. சென்­னை­யில் மட்­டும் மொத்­தம் 8,581 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்," என்று தெரி­விக்கப் பட்டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!