காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவண்ணா மலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 1,022 ஏரிகளில் 806 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
179 ஏரிகள் 75% அளவுக்கும் 47 ஏரிகள் 50% அளவுக்கும் நிரம்பியுள்ளதாக பாலாறு பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 267 ஏரிகளும் செங்கல்பட்டில் 444 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 76 ஏரிகளும் சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
அபாய எச்சரிக்கை
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், கரையோ ரம் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.