குளம் உடைந்து வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்

1 mins read
08e73387-c7e7-41b2-bf2a-41a9c1dc1f22
-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் குளம் கனமழை காரணமாக உடைந்ததால் உய்யக்கொண்டான் நகர், சின்னப்பா நகர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மாலையில் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் நீடித்த கனமழையால் குளம் உடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட உய்யக்கொண்டான், ஸ்ரீநகர் பகுதிகளைச் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். படம்: தமிழக ஊடகம்