34 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

34 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

1 mins read
9833cca0-2fc0-4e4b-a3f8-60995758c893
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அரசு கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி ­களுக்கு முதல்­வர்­கள் நிய­மிக்­கப்­பட்டு அர­சாணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. கல்­லூ­ரி­களில் பணி­யாற்­றிய பேரா­சி­ரி­யர்­கள் பலர் பதவி உயர்வு மூலம் முதல்­வர் பத­விக்கு உயர்ந்­துள்­ள­னர்.

இது குறித்து உயர்­கல்­வித்­துறை முதன்மைச் செய­லா­ளர் டி.கார்த்­தி­கே­யன் அர­சாணை ஒன்று வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், வேலூர், அரி­ய­லூர், ஆலங்­கு­ளம், ஓசூர், கூட­லூர், ராமேஸ்­வ­ரம், கட­லூர், கோவை, மாத­னூர், பர்­கூர், மணல்­மேடு, கொடைக்­கா­னல், விரு­து­ந­கர், அவி­னாசி, விழுப்­பு­ரம் (வானூர்), கோவில்­பட்டி, கரூர் (தரங்­கம்­பட்டி), சங்­க­ரன்­கோ­வில், பெரம்­ப­லூர், சத்­தி­ய­மங்­க­லம், காங்­கே­யம், குட­வா­சல், ஆண்­டிப்­பட்டி, பெரும்­பாக்­கம், குமா­ர­பா­ளை­யம், பல்­ல­டம், நாகப்­பட்­டி­னம், தேனி (கோட்­டூர்), மேட்­டுப்­பா­ளை­யம், சீர்­காழி, ஒரத்­த­நாடு, கட­லாடி, வால்­பாறை, நாகர்­கோ­வில் ஆகிய இடங்­களில் உள்ள 34 அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளுக்கு புதிய முதல்­வர்­கள் நிய­ம­னம் செய்­யப்­பட்டு இருக்­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.