புதிய உயர் நீதிமன்ற நீதிபதி

புதிய உயர் நீதிமன்ற நீதிபதி

1 mins read
b6ffca89-cbdf-4986-9417-39ca6788c18b
-

சென்னை: சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி சஞ்­சிப் பானர்ஜி, மேகா­லயா உயர் நீதி­மன்­றத்­திற்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் அலகா­பாத் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக செயல்­பட்டு வந்த முனீஸ்­வர்­நாத் பண்­டாரி, சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்பட்­டுள்­ளார். இதற்­கான உத்­த­ரவை அதி­பர் பிறப்­பித்து உள்­ளார். திரு முனீஸ்­வர்­நாத் பண்­டாரி பதவி ஏற்­கும் வரை சென்னை உயர் நீதி­மன்ற பொறுப்பு தலைமை நீதி­ப­தி­யாக துரை­சாமி செயல்­ப­டு­வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.