இன்று கார்த்திகை மகா தீபம்; பக்தர்கள் பங்கேற்கத் தடை

திரு­வண்­ணா­மலை: கார்த்­திகை தீபத் திரு­வி­ழா­வை­யொட்டி 2,668 அடி சிகர உச்சி­யில் இன்று மகா தீபம் ஏற்­றப்­ப­டு­கிறது.

ஆனால் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக மலை ஏற­வும் கிரி­வ­லம் செல்­ல­வும் பக்­தர்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. திரு­வண்­ணா­மலை அரு­ணா­ச­லேஸ்­வ­ரர் கோயி­லில் கார்த்­திகை தீபத் திரு­விழா கடந்த 10ஆம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கி­யது.

கடந்த ஆண்டைப் போன்றே இவ்­வாண்­டும் கிரு­மித்தொற்று தடுப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக கோயி­லில் உற்­சவ நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும்­போது பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்ய அனு­மதி ரத்து செய்­யப்­பட்டுள்­ளது.

தீபத்­தி­ரு­வி­ழா­வின் சிகர நிகழ்ச்­சி­யாக இன்று மாலை ஆறு மணி­ய­ள­வில் 2,668 அடி உயர மலை உச்­சி­யில் மகா­தீ­பம் ஏற்­றப்­ப­டு­கிறது. இதை­யொட்டி இன்று அதி­கா­லை­யில் கோயில் நடை திறக்­கப்­பட்டு அதி­காலை நான்கு மணிக்கு சாமி சன்­னி­தி­யில் உள்ள அர்த்த மண்­ட­பத்­தில் பர­ணி­தீ­பம் ஏற்­றப்­படும்.

மாலை­யில் பஞ்­ச­மூர்த்­தி­கள், சாமி சன்­னிதி முன்­பாக எழுந்­த­ருளவிருக்­கின்­ற­னர். இதன் பிறகு ஆறு மணிக்கு ஆண்­டுக்கு ஒரு­முறை மட்­டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்­வ­ரர், சாமி சன்­னி­தி­யில் இருந்து ஆடி­ய­ப­டியே கொடி­ ம­ரம் வந்து பக்­தர்­க­ளுக்கு காட்சி தரு­வார். அர்த்­த­நா­ரீஸ்­வ­ரர் காட்சி தந்­த­தும் சரி­யாக மாலை ஆறு மணி­ய­ள­வில் சாமி சன்­னிதி முன்பு அகண்­ட­தீ­பம் ஏற்­றப்­படும். அதே­நே­ரத்­தில் மலை உச்­சி­யில் மகா­தீ­பம் ஏற்­றப்­படும். மலை உச்­சி­யில் ஏற்­றப்­படும் மகா தீபத்­தைக் காண ஆயி­ரக்கணக்­கான பக்­தர்­கள் மலை­யேறி உச்­சிக்­குச் செல்­வது வழக்­கம். ஆனால் இந்த ஆண்டு பக்­தர்­கள் மலை­யே­ற­வும் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

மேலும் மகா தீபத்­தன்று வரும் பெளர்­ண­மி­யன்­றும் திரு­வண்ணா மலை­யில் லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் கிரி­வ­லம் செல்­வது வழக்­கம். கார்த்­திகை மாத பௌர்­ணமி நேற்று வியா­ழக்­கி­ழமை மதி­யம் 1.03 மணிக்கு தொடங்கி இன்று மதி­யம் 2.51 மணிக்கு நிறைவடை­கிறது. இதனால் வரும் 20ஆம் தேதி வரை திரு­வண்­ணா­ம­லை­யில் பக்­தர்­கள் கிரி­வ­லம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!