தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

30 கிராம மக்கள் வெளியேற்றம்; 2,000 ஏக்கர் பயிர்கள் நாசம்; 20 ரயில்கள் ரத்து நீங்கியது சிவப்பு எச்சரிக்கை

2 mins read
9bafdd74-f04d-4a58-b6e2-52338fb4d4e8
-

வேலூர்: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலையில் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாகக் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால், இனி கனமழை பெய்யும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சென்னை, திரு­வள்­ளூர், கட­லூர், விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை ஆகிய ஏழு மாவட்­டங்­களுக்கும் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்­ச­ரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.

இதனிடையே, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பள்­ளி­கள், கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­களும் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்திருந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை முகாம்களில் தஞ்சம் அடையும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

30 கிராம மக்கள் வெளியேற்றம்

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொன்னையாற்றில் 65,000 கன அடி நீரும் பாலாற்றில் 42,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால் 30க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுட்டனர்.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே ஈசூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈசூர் பாலாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதாக தகவல்.

2,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 200 ஏக்கர் வாழைத் தோப்பிலும் மழைநீர் தேங்கியுள்ளது. கன மழையால் 101 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

20 ரயில்கள் ரத்து

குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 13 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், 10 இடங்களில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில்-திருவனந்த புரம் ரயில் பாதையில் நேற்றும் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.