பொன்முடி: வேலூரில் மழையால் 13 பேர் உயிரிழப்பு

பொன்முடி: வேலூரில் மழையால் 13 பேர் உயிரிழப்பு

1 mins read
b6a69a38-4e53-4942-ac15-d8f89a1e0a22
-

விழுப்­பு­ரம்: கன­மழை கார­ண­மாக விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் இது­வரை 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் 1,642 வீடு­கள் சேதம் அடைந்­துள்­ள­தா­க­வும் தமி­ழக உயர்­கல்வித் ­துறை அமைச்­சர் பொன்­முடி தெரி­வித்­துள்­ளார்.

விழுப்­பு­ரத்தை அடுத்த கொளத்­தூர் பகு­தி­யில் வீடுகள் சேதமடைந்தவர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கி­யவர், "கன ­மழை தொடர்­வ­தால் மக்­கள் அவசியமின்றி வெளியே செல்ல ­வேண்­டாம், பாது­காப்­பாக இருங்­கள். இம்­மா­வட்­டத்­தில் கன­ம­ழை­யால் 1,642 வீடு­கள் சேதம் அடைந்­த­தில் 1,132 வீடு­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல் 37 கால்­நடை­களை இழந்­த­வர்­க­ளுக்கு தலா ரூ.30,000 நிவா­ர­ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது," என்றார்.

இதற்­கி­டையே, விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்சி அரசு மருத்­து­வ­ம­னை­யில் தண்­ணீர் புகுந்­த­தால் அங்கு சிகிச்­சைப் பெற்று வந்­த­ கர்ப்பிணிகள் வேறு வார்­டுக்கு மாற்றப்பட்டனர். ஸ்கேன் எடுக்­கும் இயந்­தி­ரம், ரத்த வங்கி ஆகிய பகு­தி­களில் தண்­ணீர் புகுந்­த­தால் மருத்­துவ உப­க­ர­ணங்­கள் அனைத்­தும் சேத­மா­கின.