மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழில் பெயரிட கோரி வழக்கு

சென்னை: மத்­திய அர­சின் திட்­டங்­க­ளுக்கு இந்­தி­ மொழியில் மட்­டு­மல்­லா­மல் தமி­ழி­லும் பெயர் வைக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி மதுரை உயர் நீதி­மன்­ற கிளை­யில் பொதுநல வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி மொழி­யில் வைக்­கப்­படும் பெயர்­கள் பொதுமக்களில் பல­ருக்கு புரி­ய­வில்லை என்­ப­தால் தமி­ழில் அப்­பெ­யர்­களை மொழி­பெ­யர்க்க வேண்­டும் என தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார் திருச்­செந்­தூ­ரைச் சேர்ந்த ராம்­கு­மார் ஆதித்­யன்.

"மத்­திய அர­சின் பல்வேறு திட்­டங்­களை தமிழ்­நாட்­டில் அமல்­ப­டுத்­தும்­போது தமி­ழக அர­சின் அர­சாணை, விளம்­ப­ரங்­கள், செய்­திக்­கு­றிப்­பு­களில் மேற்­படி திட்­டங்­க­ளின் பெயர்­களை தமி­ழில் குறிப்­பி­டு­கி­றார்­கள்.

"ஏற்­கெ­னவே அம­லில் உள்ள மத்­திய அர­சின் பல்வேறு திட்­டங்­க­ளுக்­கான பெயர்­க­ளை­யும் தமி­ழில் மொழி­பெ­யர்க்க உத்­த­ர­விட வேண்­டும்," என்று ராம்­கு­மார் ஆதித்யன் தமது ­ம­னு­வில் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அம்­ம­னுவை விசா­ரித்த மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, மொழி என்­பது தக­வல் பரி­மாற்­றத்­திற்­கா­னது என்­றும் மொழியை மொழி­யாக மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டது.

மேலும், விசா­ர­ணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு (நாளை) ஒத்­தி­வைத்து நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!