காவல் அதிகாரி கொலை; ஆறு பேரிடம் விசாரணை

புதுக்­கோட்டை: ஆடு திரு­டு­ப­வர் களை எப்­ப­டி­யும் பிடித்­து­விட வேண்­டும் என்ற முயற்­சி­யு­டன் அவர்களை விடாது விரட்­டிச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்­வா­ளர் பூமி­நா­தன் சந்­தே­கப் பேர்­வ­ழி­க­ளால் கொல்­லப்பட்­டார்.

புதுக்­கோட்டை மாவட்­டம், கீர­னூ­ரில் நேற்று அதி­கா­லை­யில் இந்­தச் சம்­ப­வம் நடந்தது.

குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்க எட்டு தனிப்­படை போலிஸ் குழுவை அமைத்து மாவட்­டக் காவல் கண்­கா­ணிப்­பா­ளர் நிஷா பார்த்­தி­பன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இச்சம்­ப­வம் தொடர்­பாக ஆறு பேரி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­வதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

திருச்சி மாவட்­டம், நவல்­பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்­வா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வந்­த­வர் பூமி­நா­தன். நேற்று அதிகாலை 2 மணியளவில் கீர­னூரை அடுத்த பள்­ளப்­பட்­டி­யில் அவர் சுற்­றுக்­கா­வல் பணி­யில் இருந்தபோது, ஆடு திருடும் கும்பலைத் தனியாக இரு சக்கர வாகனத்தில் விரட்­டிச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அப்பொழுது அந்தக் கும்பல் அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

கீர­னூர் அருகே தலை­யில் வெட்­டுக்­கா­யத்­து­டன் சட­ல­மா­க பூமிநாதன் மீட்கப்பட்டார்.

இந்நிலை­யில், இந்தச் சம்பவம் தொடர்பாக பழைய குற்றவாளிகள் ஆறு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பள்ளத்துப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிைடயே, கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத் தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!