தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

தமிழகத்தில் ஒரே நாளில் 18 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

1 mins read
87578614-d1a8-482a-b8d0-1439d456bce3
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஞாயி­றன்று 50,000 இடங்­களில் நடை­பெற்ற 10வது மெகா தடுப்­பூசி முகா­மில் ஒரே­நா­ளில் 18 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டது. சென்­னை­யில் மட்­டும் இந்த முகா­முக்கு வரு­கை­ய­ளித்த ஒன்­றே­கால் லட்­சம் மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

தமி­ழ­கத்­தில் 18 வய­துக்கு மேற்­பட்ட மக்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் பணி துரி­த­மாக நடந்து வரு­கிறது. இந்­நி­லை­யில், தடுப்­பூசி போடும் பணியை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் வித­மாக ஒவ்­வொரு வார­மும் வியா­ழன், ஞாயிறு ஆகிய இரு நாள்­க­ளி­லும் தடுப்­பூசி முகாம்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்த முகா­மில் 2வது தவணை தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­ளாத 71 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போட முன்­னு­ரிமை வழங்­கப்­பட்ட நிலை­யில், 6 லட்­சத்து 72 ஆயி­ரத்து 580 பேருக்கு முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 11 லட்­சத்து 48 ஆயி­ரத்து 425 பேர் 2வது தவணை தடுப்­பூ­சி­யும் போட்டுக்­கொண்­ட­னர் என்று சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்ளனர்.