'ஜெய்பீம்' திரைப்படத்தில் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டிய நடிகர் சூர்யாவுக்கு நாடோடியின மக்கள் கையில் பதாகைகளுடனும் பாம்பு, எலியுடனும் நேரில் வந்து நேற்று தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். சூர்யாவுக்கு பலரும் மிரட்டல் விடுத்து வருவது குறித்து முழக்கமிட்ட அவர்கள், சூர்யாவை ஏதாவது செய்ய நினைத்தால் அவர்கள் மீது பாம்பை விடுவோம் எனவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்று, நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இந்த உத்தரவைச் செயல்படுத்தும்படி கோரினர். படம்: ஊடகம்
முதல்வருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்த நாடோடி இன மக்கள்
1 mins read
-

