சென்னை: தமிழக மக்கள் மத்தியில் நோரோ என்ற கிருமித்தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் பெய்த வட கிழக்குப் பருவமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இந்நீரோடு கழிவு நீரும் குப்பை கூளங்களும் சேர்ந்து தண்ணீரை மிகவும் அசுத்தமாக்கி இருந்தன.
இந்நிலையில், இந்த தண்ணீா் மாசுபாட்டினால் தமிழகத்தில் பலா் நோரோ கிருமித் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கிருமித்தொற்றின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோரோ கிருமித் தடுப்பு நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல அதிலிருந்து மக்கள் மீண்டுவரும் இந்தத் தருணத்தில் நோரோ தொற்று புது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதிலும், குறிப்பாக அண்டை மாநிலமான கேரளத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக அதிகாரபூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக குளிா், மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும் என்பதால், குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவா்கள், முதியவர்கள் அதிக அளவில் இந்த நோரோ தொற்று பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரித் துள்ளனர் மருத்துவா்கள்.
இதுகுறித்து பொது நல மருத்துவ சிகிச்சை நிபுணா் டாக்டா் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா கூறுகையில், "ெகாரோனா கிருமி நுரையீரலைத் தாக்குகிறது. ஆனால், நோரோ தொற்று முழுக்க முழுக்க ஜீரண மண்டல நோயாகவே கருதப்படுகிறது. சுகாதாரமற்ற உணவு, மாசுபட்ட தண்ணீரை உட்கொள்வதால் ஒருவருக்கு நோரோ தொற்று ஏற்படலாம். இதனால், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்," என்கிறார்.