வேலூர்: வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, ஆற்றங்கரையோரம் இருந்த வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
காமராஜபுரம் பகுதியில் பாலாற்றின் கரையோரம் இருந்த கூலித்தொழிலாளி ரமேஷ் என்பவரின் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதேபோல் பசுமாத்தூர் கிராமத்தில் பாலாற்றின் கரையோரம் இருந்த மாடி வீடு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அடித்துச்செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்திலிருந்து 10,000 பேர் மீட்கப்பட்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.