கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் எல்லையில் ஊடுருவிய போது நடைபெற்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஹவில்தார் பழனியின் மனைவி அதிபர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக்கொண்டார். கல்வான் தாக்குதலின்போது இந்திய தரப்பில் 20 பேரும் சீன வீரர்கள் 40 பேரும் உயிரிழந்தனர். இதே போல் தெலுங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கும் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அதை அவரது தாயும் மனைவியும் ஒருசேர பெற்றுக்கொண்டனர். படம்: ஊடகம்
வீர மரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது
1 mins read
-

