திருச்சி: காவல் உதவி ஆய்வாளரைக் கொன்ற இளையர் மணிகண்டன் அவரை பின்புறமாகத் தாக்கியது தெரிய வந்துள்ளது.
19 வயதான மணிகண்டன் ஆடுகளைத் திருடி விற்று வந்துள்ளார். அவருக்கு உதவிய இரு சிறுவர்களும் தற்போது சிக்கியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி டிஐஜி சரவண சுந்தர், மணிகண்டனுடன் சேர்த்து இரண்டு சிறுவர்களும் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
"சிறுவர்கள் தாக்கியதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை என சிலர் கூறுகிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தை அரசியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது," என்றார் டிஐஜி சரவண சுந்தர்.
இதற்கிடையே, கைதான மூவருக்கும் போதைப் பழக்கம் இருந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

