'போதை தரும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்கக் கூடாது'

'போதை தரும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்கக் கூடாது'

1 mins read
b6b4143e-18d4-4987-938d-8011c1d5b994
-

சென்னை: போதை ஏற்­ப­டுத்­தக் ­கூ­டிய மருந்து, மாத்­தி­ரை­களை மருத்துவர்­கள் பரிந்­து­ரை­யின்றி விற்­பனை செய்­தால் மருந்தக உரி­மை­யா­ளர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்படும் என்று சென்னை பெரு­ந­கர காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

மருத்­து­வத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் போதை தரக்­கூ­டிய மாத்­தி­ரை­களை சில இளை­ஞர்­கள், சிறு­வர்­கள் வாங்­கிப் பயன் ­ப­டுத்­து­வ­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன. இந்த நிலை­யில் காவல் கூடு­தல் ஆணை­யர்­கள் செந்­தில்­கு­மார், கண்­ணன் ஆகி­யோர் தலை­மை­யில் மருந்­துக்­கடை உரி­மை­யா­ளர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னர். அப்­போது, போதை தரக்­கூ­டிய மருந்­து­கள் மற்­றும் மாத்­தி­ரை­களை மருத்­து­வ­ரின் பரிந்­து­ரை­யின்றி யாருக்­கும் விற்­பனை செய்­யக்­ கூடாது என்­றும் அப்­படி செய்­தால் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் காவல்­து­றை­யி­னர் கூறினர்.