ரேஷன் அரிசி கடத்தல்; 3,804 வழக்குகள் பதிவு

சென்னை: தமி­ழ­கத்­தில் ேரஷன் அரிசி கடத்­தல் தொடர்­பில் கடந்த ஆறு மாதங்­களில் 3,804 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

குடி­மைப்­பொ­ருள் வழங்­கல் குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை இதனை தெரி­வித்­தது.

பொது­வி­நி­யோக திட்­டத்­தின் மூலம் மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக அல்­லது மலிவு விலை­யில் உண­வுப் பொருட்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் கடத்­தப்­பட்டு, பதுக்­கப்­பட்டு கள்­ளச்­சந்­தை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன.

இந்த நிலை­யில் குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை காவல்­துறை இயக்­கு­நர் ஆ பாஸ்­கு­மார் உத்­த­ர­வின்­பே­ரில் காவல் துணைக் கண்­ கா­ணிப்­பா­ளர்­கள், ஆய்­வா­ளர்­கள் தலை­மை­யில் பல குழுக்­க­ளாகப் பிரிந்து தமி­ழ­கம் முழு­வ­தும் தீவிர தணிக்கை மற்­றும் வாகன சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

இந்­தச் சோத­னை­க­ளின்­போது கடந்த 6 மாத கால­மாக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி, கள்­ளச்­சந்­தை­யில் அண்டை மாநி­லங்­க­ளுக்கு வாக­னங்­களில் கடத்தி விற்­பனை செய்­தது தொடர்­பாக 3,804 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் 2,628 மெட்­ரிக் டன் ரேஷன் அரிசி பறி­மு­தல் செய்­யப் ­பட்­டுள்­ள­தா­க­வும் குடி­மைப்­பொ­ருள் வழங்­கல் குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை போலி­சார் தெரி­வித்­த­னர்.

இதில் தொடர்­பு­டைய 631 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு 3,897 நபர்­கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற காவ­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மேலும் மண்­ணெண்­ணெய் தொடர்­பாக 139 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு 15,780 லிட்­டர் மண்­ணெண்­ணெய் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக 142 நபர்­கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றக் காவ­லுக்கு உட்படுத்தப் பட்­டுள்­ள­னர்.

மானிய விலை­யில் வழங்­கப்­படும் எரி­வாயு உரு­ளை­கள் தவறு­ த­லாக வணி­கப் பயன்­பாட்­டிற்குப் பயன்­ப­டுத்­தி­ய­தாக மொத்­தம் 347 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு அதில் 420 எரி­வாயு உரு­ளை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு 345 நபர்­கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற காவ­லுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­னர் என்று குடி­மைப்­பொ­ருள் வழங்­கல் குற்­றப்­பு­ல­னாய்வுத் துறை போலி­சார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!