ரூ.160க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.80க்கு சரிந்ததால் மக்கள் நிம்மதி மலிவு விலையில் 16 வகை காய்கறிகளை விற்க ஏற்பாடு

ரூ.160க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.80க்கு சரிந்ததால் மக்கள் நிம்மதி மலிவு விலையில் 16 வகை காய்கறிகளை விற்க ஏற்பாடு

2 mins read
0e6adf79-fd45-4d39-b511-754715662d08
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை குறைந்துள்ளது. தக்காளியின் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள நகா்ப்­பு­றங்­க­ளி­லும் அதன் சுற்று வட்­டா­ரங்­க­ளி­லும் உள்ள நியாய விலைக் கடை­களில் தக்­காளி உள்­ளிட்ட 16 வகை காய்­க­றி­களை விற்­பனை செய்ய தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக கூட்­டு­ற­வுத் துறை அமைச்சா் ஐ.பெரி­ய­சாமி தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லம் முழு­வ­தும் வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யின் தாக்­கத்­தால் தக்­காளி உள்­ளிட்ட பெரும்­பா­லான காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், ஏழை, நடுத்­தர குடும்­பத்­தி­னர் பெரும் பாதிப்­புக்கு ஆளா­கினா்.

இந்­நி­லை­யில், மக்­க­ளின் விலை­வாசி சுமை­யைக் குறைக்க நியாய விலைக் கடை­களில் 16 வகை காய்­க­றி­கள் விற்­கப்­பட உள்­ளன.

அர­சின் இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யால், வெளிச்­சந்­தை­யில் ஆப்­பிள் விலைக்கு நிக­ராக ரூ.160 வரை விற்­கப்­பட்டு வந்த ஒரு கிலோ தக்­கா­ளி­யின் விலை இப்­போது ரூ.80 ரூபா­யா­கக் குறைந்­துள்­ளது.

இத­னால் பொது­மக்­கள் சற்று நிம்­ம­தி­ய­டைந்­தா­லும், மேலும் விலை குறை­ய­வேண்­டும் என்­பதே பொது­மக்­கள், உண­வக உரி­மை­யா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதர காய்­க­றி­க­ளின் விலை­யும் கணி­ச­மா­கக் குறைந்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

அத்­து­டன், நக­ரும் பண்­ணைப் பசு­மைக் காய்­க­றி­கள் கடை­கள் மூல­மும் ஒரு கிலோ தக்­காளி ரூ.79க்கு விற்­கப்­பட்டு வரு­கிறது.

இது­கு­றித்து அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "குறைந்த விலை­யில் காய்­க­றி­களை விற்­பனை செய்ய அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதற்­காக தின­மும் 15 மெட்­ரிக் டன் தக்­காளி, இதர காய்­க­றி­க­ளைக் கொள்­மு­தல் செய்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன," என்­றார்.

இந்­நி­லை­யில், "கோயம்­பேடு சந்­தை­யில் உள்ள தக்­காளி மைதா­னத்தை திறந்­தால் ஒரு கிலோ தக்­காளி ரூ.40 முதல் ரூ.50க்குள் மக்­க­ளுக்கு விற்­பனை செய்­யத் தயா­ராக உள்­ளோம். தக்­காளி வரத்து குறைந்­த­தால்­தான் தக்­காளி விலை ஏற்­றத்­தில் உள்­ளது," என சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த ஒரு வழக்கு விசா­ர­ணை­யில் தந்தை பெரி­யார் தக்­காளி மொத்த வியா பாரி­கள் சங்­கம் கூறி­யுள்­ளது.

கோவை­யில் பொது­மக்­கள் அனை­வ­ருக்­கும் தக்­காளி ஒரே சீராக கிடைக்­கும் வகை­யில், வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ருக்கு 2 கிலோ தக்­காளி மட்­டுமே விற்­பனை செய்­ய­வேண்­டும் என­வும் திரு­ம­ணம் உள்­ளிட்ட நிகழ்­வு­க­ளுக்கு அதிக அள­வில் தக்­காளி வழங்­க­வேண்­டும் என வியா­பா­ரி­க­ளுக்கு வேளாண் வணிக அதி­காரி அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.