'சிங்கப்பூர், மலேசியாவுடன் விமானப் போக்குவரத்து உடன்பாடு'

'சிங்கப்பூர், மலேசியாவுடன் விமானப் போக்குவரத்து உடன்பாடு'

1 mins read
808cb075-939b-49a5-b0c1-c95327dbf8dd
-

சென்னை: இந்­திய அர­சின் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு, சிங்­கப்­பூர், மலே­சியா போன்ற நாடு­க­ளு­டன் கொவிட்-19 கால விமா­னப் போக்­கு­வ­ரத்­திற்­கான ஒப்­பந்­தம் செய்­து­கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்தி, தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ருக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

"சிங்­கப்­பூர், மலே­சி­யா­வில் வசிக்­கும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த தமி­ழர்­கள் பலர் கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் நாடு திரும்­பி­னர். இந்­நி­லை­யில், நேரடி விமான சேவை­கள் இல்­லா­த­தால் அவர்­கள் மீண்­டும் அந்­நா­டு­க­ளுக்­குத் திரும்­பு­வ­தில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

"அதே­போல, அந்­நா­டு­களில் இருந்து தமிழ்­நாட்­டிற்கு வரு­வ­தற்­கும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

"நேரடி விமான சேவை­யில்­லாத கார­ணத்­தால் துபாய், தோஹா, கொழும்பு வழி­யாக மாற்­றுப் பாதை­யில் அவர்­கள் பய­ணம் செய்ய வேண்­டி­யுள்­ளது. அத­னால் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொள்­ளும் அவர்­கள், அதிக விமா­னக் கட்­ட­ணங்­க­ளை­யும் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

"அவர்­கள் எதிர்­கொள்­ளும் இடர்ப்­பா­டு­க­ளைத் தீர்ப்­ப­தற்­குத் தற்­கா­லிக விமான சேவை­களை வழங்­கிட ஏது­வாக, சிங்­கப்­பூர், மலே­சியா நாடு­க­ளு­டன் தற்­கா­லிக கொவிட்-19 'விமா­னப் போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­கள்' உடன்­பாட்­டைச் செய்­து­கொள்ள வேண்­டும்," என்று திரு ஸ்டா­லின் தமது கடி­தத்­தில் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.