அண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க உத்தரவு

அண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க உத்தரவு

1 mins read
164beede-b648-4aee-a940-c8629e27b924
-

சென்னை: தினந்­தோ­றும் புதுப்­புது அர­சா­ணை­களை வெளி­யிட்டு வரு­கி­றார் முதல்­வர் மு.க. ஸ்டா­லின்.

நேற்­றும் இது­போல் அவர் வெளி­யிட்­டுள்ள அர­சா­ணை­யில், பேர­றி­ஞர் அண்­ணா­வின் பிறந்த நாளின்­போது, தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து சிறைச்­சா­லை­க­ளி­லும் நீண்­ட­கா­ல­மாக தண்­டனை அனுப வித்து வரும் 700 ஆயுள் தண்­ட­னைக் கைதி­களை முன்­கூட்­டியே விடு­விக்க அர­சாணை வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

நன்­ன­டத்தை, நல்­லொ­ழுக்­கம், மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் இந்த 700 கைதி­க­ளை­யும் முன்­கூட்­டியே விடு­தலை செய்ய முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனால், பாலி­யல் வன்­கொ­டுமை, பயங்­க­ர­வா­தம், சாதி, மத மோதல் உள்­ளிட்ட 17 குற்­றங்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் விடு­விக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறி­ஞர் அண்ணா பிறந்­த­நாளை முன்­னிட்டு ஆயுள் தண்­டனை கைதி­கள் விடு­விக்­கப்­ப­டு­வார்­கள் என்று சட்­ட­மன்­றத்­தில் ஏற்­கெ­னவே முதல்­வர் அறி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இது­கு­றித்த அர­சா­ணை­யைத் தமிழ்­நாடு அரசு தற்­போது வெளி­யிட்­டுள்­ளது.

பேர­றி­ஞர் அண்­ணா­வின் 113வது பிறந்த நாள் அடுத்த 2022ஆம் ஆண்டு செப்­டம்­பர் 15ஆம் தேதி வரு­கிறது.

அந்த சம­யத்­தில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஆயுள் தண்­டனை கைதி­கள் விடு­தலை செய்­யப்­பட உள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.