சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, வருமானத்திற்கு அதிகமாக 468% அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி கவுன்சிலராகவும் 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சத்தியநாராயணன்.
இவர் தனது பதவிக் காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தக்ஷன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

