கடலூர்: கடலூரில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 10.5% இடஒதுக்கீடு பிரச்சி னையில் தமிழக அரசு நன்றாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
"10.5% உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்குரைஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
"வரும் தேர்தலில் பாமக வெற்றிபெற்று, அன்புமணி ராமதாசை முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்கவேண்டும்," என்றார்.
கட்சித் தலைவர் கோ.க.மணி பேசுகையில், பாமகவின் கோட்டை என்று சொல்லப்படும் இடங்களிலேயே கோட்டை விட்டுள்ளோம். அதனை மீட்கவேண்டும் என்றார்.