தொடர்மழையான அடைமழை

தொடர்மழையான அடைமழை

2 mins read
60ca3deb-aec5-4c4c-b9dc-661fe1bb214b
தூத்துக் குடியில் கடும் மழை தொடர்ந்தது. அங்குள்ள மிகவும் புகழ்பெற்ற திருச் செந்தூர் கோயிலில் புகுந்த வெள்ளநீர் இன்னமும் வடிய வில்லை. படம்: இந்திய ஊடகம் -

தமிழ்நாடு: டிசம்பர் முதல் வாரம் வரை மழை என கணிப்பு; 7 பேர் பலி; வழமைநிலை பாதிப்பு

சென்னை: தமிழ்­நாட்­டில் வட­கிழக்குப் பரு­வ­மழை வழக்­கத்­திற்கு மாறாக தொடர்ந்து அதி­க­மாக பெய்து வரு­கிறது.

ஏற்­கெ­னவே ஏறத்­தாழ மாநி­லம் முழு­வ­தும் இடை­விடா மழை­யால் பாதிக்­கப்­பட்டு உள்ள நிலை­யில் வியா­ழன் முதல் மீண்­டும் கன­மழை தொடங்­கி­யது. இந்­நி­லை­யில், அடுத்த மாதம் முதல் வாரம் வரை கன­மழை தொடர வாய்ப்பு இருப்­பதாக வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்து இருக்­கிறது.

இவ்­வே­ளை­யில், 12 மாவட்­டங்­களில் அர­சு முகாம்­களில் 10,503 பேர் தங்கியிருப்­ப­தா­க­வும் சென்னை புற­ந­க­ரில் தற்­கா­லிக முகாம்­களில் 620 பேர் பாது­காப்­பாக இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் கேகே­எஸ்­எஸ்­ஆர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இப்போதைய மழை கார­ண­மாக அரி­ய­லூர், திண்­டுக்­கல், சிவ­கங்கை, திரு­வண்­ணா­மலை, தஞ்­சா­வூர் ஆகிய பகு­தி­களில் மொத்­தம் ஏழு பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மாநி­லத்­தில் 152 கால்­ந­டை­கள் மர­ண­ம­டைந்­து­விட்­டன. மொத்­தம் 681 குடிசைகளும் 120 கான்­கி­ரீட் வீடு­களும் இடிந்­து­விட்­ட­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்­டில் அக்­டோ­பர் 1 முதல் நவம்­பர் 26 வரை வட­கி­ழக்­குப் பரு­வ­மழை வழக்­கத்­தை­விட 70% அதி­க­மாக பெய்து இருக்­கிறது. 37 மாவட்­டங்­களில் சரா­சரி மழை அளவு அதிகமாக உள்ளது.

கடந்த இரு நாட்­களில் தூத்­துக்­குடி, நாகப்­பட்­டி­னம், விருது­ ந­க­ரில் ஆக அதிக மழை பெய்­துள்­ளது. பல நீர்த்­தேக்­கங்­கள் நிரம்பிவிட்டன. மாநிலத்தில் உள்ள 14,138 ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டன. தொடர்ந்து தண்­ணீர் திறந்­து­விடப்­படு­கிறது.

தூத்­துக்­கு­டி­யில் 10,000 வீடு­கள் வெள்­ளத்­தில் தத்­த­ளிக்கின்றன.

பல மாவட்டங்­க­ளுக்­கும் சிவப்பு, ஆரஞ்சு எச்­ச­ரிக்­கை­கள் விடுக்­கப்­பட்டுள்ளன. 25 மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

தலை­ந­கர் உள்­ளிட்ட பல பகுதி­ க­ளி­லும் தண்­ணீர் தேங்குவ­தால் வழமைநிலை பாதிக்­கப்­பட்டுள்­ள­து. இந்நிலையில் அடைமழை தொடர் மழையாக நீடிக்கிறது.