தமிழ்நாடு: கொவிட்-19 எதிர்ப்புசக்தி கணிசமாக மேம்பாடு

சென்னை: தமி­ழ­கத்­தில் அர­சாங்­கம் மேற்­கொண்டு வரும் தீவி­ர­கொவிட்-19 தடுப்­பூசி இயக்­கத்­தின் பல­னாக மக்­க­ளின் உட­லில் நோய் எதிர்ப்­பாற்­றல் கணி­ச­மாக கூடி இருப்பதாக சுகா­தார அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் 15க்கும் மேற்­பட்ட மாவட்­டங்­களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 80 விழுக்­காட்­டுக்கும் அதி­க­மாக இருக்­கிறது. மற்ற மாவட்­டங்­களில் அந்த விகி­தாச்­சா­ரம் 60 விழுக்­காட்டை கடந்து இருக்­கிறது.

ஆகை­யால், இது­வரை வாரம் இரண்டு நாட்­கள் நடந்­து­வந்த தடுப்­பூசி முகாம் இனி­மேல் வாரம் ஒரு முறை­யாக மாற்­றப்­ப­டு­கிறது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்­டில் இது­வரை 77.02 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது. 41.60 விழுக்­காட்­டி­னர் இரண்­டா­வது ஊசி­யை­யும் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

என்­றா­லும் வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, மயி­லா­டு­துறை உள்­ளிட்ட ஏழு மாவட்­டங்­களில் தடுப்­பூசி இயக்­கத்­துக்கு மக்­கள் குறிப்­பி­டத்­தக்க அள­வில் செவி­சாய்க்­க­வில்லை என்­ப­தால் இனி அந்த மாநி­லங்­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­படும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, தமிழ்­நாட்டில் கொவிட்-19 அன்­றாடத் தொற்று ஏறத்­தாழ 700 ஆகக் குறைந்து இருக்­கிறது. மரண எண்­ணிக்கை 20க்கும்கீழ் குறைந்­துள்­ளது.

இவ்­வே­ளை­யில், மழை கார­ண­மாக சென்னை உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் காய்ச்­சல், வயிற்­றுப்­போக்கு அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது. டெங்கி காய்ச்­ச­லும் மிரட்­டு­வ­தால் அர­சாங்­கம் இவற்­றி­லும் கவ­னம் செலுத்­து­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் 4,527 பேருக்கு டெங்கி காய்ச்­சல் உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் இப்­போது 573 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!