‘அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்யவே கலைஞர் உணவகம்’

சென்னை: அம்மா உண­வ­கங்­களை இருட்­ட­டிப்பு செய்­யும் விதத்­தில், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி காரண மாக 500 'கலை­ஞர் உண­வ­கங்­கள்' தொடங்­கப்­பட உள்­ள­தாக முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

ஏழை மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் மாநி­லம் முழு­வ­தும் செயல்­பட்டு வரும் 700 அம்மா உண­வ­கங்­களில் மிகக் குறைந்த விலை­யில் உணவு வழங்­கப்­பட்டு வரு­கிறது. அத்­து­டன், பேரி­டர் காலங்­களில் இல­வ­ச­மா­க­வும் உணவு வழங்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அம்மா உண வகத்­து­டன் கூடு­த­லாக 500 கலை­ஞர் உண­வ­கங்­களும் வருங்­கா­லத்­தில் அமைக்­கப்­பட உள்­ள­தாக உண­வுத்­துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி டெல்­லி­யில் பேசி­யி­ருந்­தார்.

தேர்­தல் சம­யத்­தில் திமுக அளித்த வாக்­கு­று­தி­களில் இது­வும் ஒன்­று­தான் என்­றா­லும் இதற்கு கண்­ட­னம் தெரி­வித்து அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓபி­எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "அம்மா உண­வ­கம்' என்று நடை­மு­றை­யில் உள்ள ஒரு திட்­டத்தை அந்­தப் பெய­ரி­லேயே விரி­வு­ப­டுத்­தா­மல் புதி­தாக அதற்கு 'கலை­ஞர் உண­வ­கம்' என்று பெயர் வைப்­பது அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்­டது. காலப்­போக்­கில், அம்மா உண­வ­கங்­க­ளைக் கலை­ஞர் உண­வ­கங்களாக மாற்­று­வ­தற்­கான ஒரு முயற்­சியாக அமைச்­ச­ரின் பேச்சு அமைந்­துள்­ளது," என்று கூறியுள்­ளார்.

முன்­னாள் அமைச்­சர் செல்­லூர் ராஜு கூறுகையில், "கலை­ஞர் உண­வ­கங்­கள் கொண்டு வரு­வதை வர­வேற்­கி­றோம். ஆனால், அம்மா உண­வ­கங்­களை முழுமையாக மூடி மறைத்­து­வி­டா­மல் கலை­ஞர் உண­வ­கங்­கள் செயல்­ப­ட­வேண்­டும்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, சேலம், நவப்­பட்டி ஊராட்­சி­யில் 'அம்மா மினி கிளி­னிக்' என்ற பெயர் மாற்­றப்­பட்டு, அதில் இருந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் படம் நீக்­கப்­பட்டு, கரு­ணா­நிதி, ஸ்டா­லின் படங்­க­ளு­டன் 'முத­ல­மைச்­சர் கிளி­னிக்' என திமு­க­வி­னர் பெயர் பலகை வைத்­துள்­ளது அங்­குள்ள அதி­மு­க­வி­னர் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!