12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 2,500 வீடுகள் சேதம்; குழந்தை உட்பட ஐவர் பலி வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

சென்னை: கடந்த மூன்று நாள்­களாகப் பெய்து வரும் தொடா் மழை­யால் தலை­ந­கர் சென்­னை­யின் முக்­கிய பகு­தி­கள் மீண்­டும் வெள்­ளத்­தில் தத்­த­ளித்து வரு­கின்­றன. இத­னால் அத்­தி­யா­வ­சி­ய தேவைக்கு கூட வெளி­யில் வர முடி­யா­மல் வீட்­டுக்­குள்­ளேயே மக்கள் முடங்கி உள்­ள­னர்.

ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மான தெருக்­கள் கொண்ட சென்னை மாந­க­ரில், தாழ்வான பகுதிகளில் உள்ள 500 தெருக்­களில் மழை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது.

அத்துடன், ஆயி­ரக்­க­ணக்­கான வீடு­க­ளிலும் வெள்ளநீர் புகுந்­தது.

இந்­நீரை வெளி­யேற்­றும் பணி­களில் மாந­க­ராட்சி ஊழி­யர்­களும் அதி­கா­ரி­களும் போலிசா­ரும் ஈடு­பட்டு வருகின்றனர்.

கடந்த முறை மழை வெள்­ளம் தேங்­கிய இடங்­க­ளி­லேயே மீண்­டும் மழை நீர் தேங்கி உள்­ள­தால், வடி­கால்­களை முறை­யா­கப் பரா­ம­ரிக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் ககன்­தீப்­சிங் பேடி அறி­வு­றுத்தி உள்­ளார்.

ரங்­க­ரா­ஜ­பு­ரம், தியாகராய நகர் மேட்லி சுரங்­கப்­பா­தை­யில் மழை­நீர் தேங்கியுள்­ள­தால் இப்­பா­தை­கள் மூடப்­பட்டு போக்­கு­வ­ரத்துகளும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

தமி­ழ­கத்­தில் 23 மாவட்­டங்­களில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்­கும் நேற்று விடு­முறை விடப்பட்­டது.

“800 மோட்டாா் பம்­பு­கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். மழையை எதிா்கொள்­ளத் தயாா் நிலை­யில் உள்­ளோம்,” என்­று மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கூறியுள்ளனர்.

சென்­னை­யில் தாழ்­வான பகு­தி­களில் தேங்­கிய நீரை இன்றோ, அல்­லது நாளையோ முழு­மை­யாக அகற்றிவிடு­வோம் என்று அமைச்­சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

“காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் கன­ம­ழை­யால் 830 ஏரி­கள் நிரம்­பி உள்ளன. இங்கு தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் தயார் நிலை­யில் உள்­ள­னர்.

“நிவா­ரண முகாம்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு அனைத்து வச­தி­களும் செய்து கொடுக்­கப்பட்­டுள்­ளது.

“தமிழ்­நாட்­டில் 2,205 குடி­சை­கள், 273 வீடு­கள் மழை­யால் சேத­­மடைந்துள்­ளன. மழை, வெள்­ளத்­தில் சிக்கி 244 கால்­ந­டை­கள் உயி­ரி­ழந்­துள்­ளன,” என்றார் அமைச்சர்.

வளி மண்­டல மேல­டுக்கு சுழற்சி கார­ண­மாக, சென்னை உள்­ளிட்ட 12 கட­லோர மாவட்­டங்­களில் இடி, மின்­ன­லு­டன் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தால் இரு தினங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இம்மாவட்டங்களைச் சுற்­றி­யுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை­ விடுத்துள்ளனர்.

குழந்தை உட்­பட ஐவர் பலி

நெல்லை மாவட்­டத்­தில் வீட்­டின் சுவர் இடிந்­த­தில் 3 வயது குழந்தை அருள்­பேபியும் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் இரு­ முதியோர்களும் பலி­யா­னார்­கள். கணே­சன், 65, மின்­னல் தாக்கி உயி­ரி­ழந்­தார். குடி­யாத்­தத்­தில் ஆற்­றில் இறங்கி செல்ஃபி எடுத்த ரமேஷ், 50, என்ப வர் வெள்­ளத்­தில் அடித்துச் செல்­லப்­பட்­டு உயிரிழந்தார்

கிராம மக்கள் சாலை மறியல்

திரு­வள்­ளூர் அருகே தண்­ணீர்­கு­ளம், ராமா­பு­ரம் கிரா­மங்­களில் வசிக்கும் 1,000க்கும் மேலான குடும்­பத்­தி­னர் தங்­கள் குடி­யி­ருப்பு­களில் புகுந்த மழைநீரை அகற்றக் கோரி சாலைமறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!