நீலகிரி: வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.500 பணத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கின் தொடர்பில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.6,000 அபராதமும் விதித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி யவர் தாண்டவ நடராஜன்.
இவர், இதே பகுதியைச் சேர்ந்த ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜான்பாஸ்கோ ஊழல், லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரிடம் புகார் அளித்தார்.