‘மது அருந்த வருபவர்கள் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்’

சென்னை: மதுபானக் கூடங்களுக்கும் ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளுக்கும் வருபவர்கள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகப் போட்டிருக்க வேண்டும் என்று மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முன்னணி மாநிலமாகத் தமிழகத்தை திகழச் செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

அதன்படி, வாரத்தில் இரு முறை வியாழன், ஞாயிறன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் 12வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

“பருவமழை காலத்திலும் மக்கள் முகாம்களுக்கு அதிகமாக வருகின்றனர். தடுப்பூசி போடுவது மாெபரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது,” என்று அமைச்சர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!