செய்திக்கொத்து

வேதா இல்­லத்­தின் சாவி­ கேட்டு தீபா, தீபக் ஆட்சியரிடம் மனு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தா­வின் பல நூறு கோடி ரூபாய் மதிப்­பி­லான வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்­களுக்குள் தங்­க­ளி­டம் வழங்கவேண்­டும் என ஜெய­ல­லி­தா­வின் அண்­ணன் ஜெயக்­கு­மா­ரின் வாரி­சு­களான ஜெ.தீபா­வும் ஜெ.தீபக்­கும் உயர்­ நீ­தி­மன்­றத் தீர்ப்பு நகலை இணைத்­துச் சென்னை மாவட்ட ஆட்­சி­யர் ஜெ.விஜ­யா ­ரா­ணி­யி­டம் மனு அளித்­துள்­ள­னர்.

ஜெய­ல­லி­தா­வின் இல்­லத்தை அரசு கைய­கப்­ப­டுத்­தி­யது செல்­லாது எனத் தீர்ப்­ப­ளித்த உயர் நீதி­மன்­றம், சட்­டப்­ப­டி­வாரி­சு­க­ளான தீபா, தீபக் ஆகி­யோ­ரி­டம் இல்­லத்தை மூன்று வாரங்­க­ளுக்­குள் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்டுள்ளது.

17 இடங்­களில் காற்­றுத் தர அள­வீட்டு நிலை­யங்­கள்

சென்னை: மாநி­லம் முழு­வ­தும் 17 இடங்­களில் சுற்­றுப்­புற காற்­றின் தரத்தை அள­வீடு செய்­யும் நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான அர­சா­ணையை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இதன்மூலம் காற்று மாசு­பாடு குறித்த முழுத் தகவல்களையும் உட­ன­டி­யா­கத் தெரிந்துகொள்­ள­மு­டி­யும் என்று அர­சா­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விமானநிலை­யத்­தில் தீவிர சோதனை

சென்னை: தென்­னாப்­பி­ரிக்கா, ஹாங்­காங் ஆகிய நாடு களில் பி.1.1.529 என்ற புதிய வகை ஓமிக்­ரான் உரு­மா­றிய கொரோனா கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதை அடுத்து, சென்னை விமான நிலை­யத்­தில் பரி­சோ­தனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உலக அளவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இது­வரை 55,090 பேரி­டம் நடத்தப்பட்ட பரி­சோ­தனையில் மூவ­ருக்கு தொற்று இருப்­பது உறுதியானதாகத் தகவல்கள் கூறியுள்ளன.

இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 23 மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் சென்னை விமானநிலையம் வந்துசேர்ந்தனர். படம்: ஊடகம்

சென்னை: இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, 45 நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மற்ற ஐந்து மீனவர்களும் கொரோனா சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்ப உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.

‘‘இலங்கையிலிருந்து எங்களை மீட்டெடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உளம்கனிந்த நன்றி,’’ என்று மீனவர் கள் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!