41 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை; 200 ஆண்டுகளில் இம்மாதத்தில் அதிக மழை முகாம்களில் 11,000 பேர் தஞ்சம்

சென்ைன: தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தீவி­ரம் அடைந்­துள்ள நிலை­யில், பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் கன­மழை பர­வ­லா­கப் பெய்து வரு­கிறது. இத­னால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மழை வெள்­ளம் சூழ்ந்­துள்ள தாழ்­வான பகு­தி­களில் வசித்த 11,000க்கும் மேற்­பட்டோா் நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக வரு­வாய்த் துறை அமைச்சா் கேகே­எஸ்­எஸ்ஆா் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

திரு­வள்ளூா், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, கடலூா், நாகப்­பட்­டி­னம், புதுக்­கோட்டை, தூத்­துக்­குடி, அரி­யலூா், திண்­டுக்­கல், வேலூா் உள்ளிட்ட மாவட்­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள நிவா­ரண முகாம்­களில் 11,329 பேரும் சென்­னை­யில் 653 பேரும் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனா் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன் கூறி­னார்.

மாநி­லம் முழு­வ­தும் அடுத்த ஐந்து நாட்­க­ளுக்கு இந்­தக் கன­மழை தொடர வாய்ப்­புள்­ள­தா­க­வும் இந்­திய வானிலை ஆய்வு மையம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யின் புற­ந­கர் பகு­தி­க­ளான பூந்­த­மல்லி, திரு­வேற்­காடு, ஆவ­டி­யில் மழை யால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை பார்­வை­யிட்ட முதல்­வர் மழை­நீர் அகற்­றும் பணி­களைத் துரி­தப்­படுத்­தும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.

அடுத்த சில நாள்­க­ளுக்­கும் இந்­தக் கனமழை தொட­ரும் என அறி­விக்­கப்­பட்டிருப்­ப­தால், மக்­கள் பிர­தி­நி­தி­களும் அரசு அதி­கா­ரி­களும் நேரம், காலம் பார்க்­காது களத்­தி­லேயே இருந்து மக்­க­ளுக்கு உத­வ­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார். உங்­க­ளோடு நானும் களத்­தில் நிற்­பேன் என்­றும் முதல்வர் கூறி­னார்.

200 ஆண்டுகளில் அதிக மழை

வட­கி­ழக்குப் பரு­வ­ம­ழை­யால் சென்­னை­யில் வழக்­கத்தை விட 77% மழை பதி­வா­கி­யுள்­ளது. சென்­னை­யில் இந்த நவம்­பர் மாதத்­தில் மட்­டும் 1,000 மில்லி மீட்­டர் மழை பெய்­துள்­ளது. கடந்த 200 ஆண்டு­களில் இந்­த­ள­வுக்கு மழை பெய்­துள்­ளது, நான்­கா­வது முறை­யா­கும். நவம்­பர் மாதத்­தில் மழைப்­பொ­ழிவு சத­ம­டித்­தி­ருப்­பது மூன்­றா­வது முறை­யா­கும் என்று வானிலை வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

41 கிரா­மங்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை

தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் கடந்த வியா­ழன் முதல் மீண்­டும் கன­மழை பெய்து வரு­வ­தைத் தொடர்ந்து, அனைத்து குளங்­கள், குட்­டை­கள், ஏரி­கள், கண்­மாய்­கள் உள்­ளிட்ட நீர்­நி­லை­கள் வேக­மாக நிரம்பி வழி­கின்­றன.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள மது­ராந்­த­கம் ஏரி­யின் உபரி­நீர் வெளி­யேற்­றப்­பட்டு வரு­கிறது. இதை­ய­டுத்து 21 கிராம மக்­க­ளுக்கு மாவட்ட நிர்­வா­கம் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இேதபோல், அரி­ய­லூர், பெரம்­ப­லூர், சேலம், கட­லூர் மாவட்­டங்­களில் பொழிந்த கன­மழை கார­ண­மாக மூன்­றா­வது முறை­யாக வெள்­ளாற்­றில் மீண்­டும் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் கரை­யோ­ர­முள்ள 20 கிராம மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!