மீண்டும் மஞ்சப்பை பிரசாரம்

மீண்டும் மஞ்சப்பை பிரசாரம்

1 mins read
e765de11-c61b-44aa-9a85-12456d2dea23
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மீண்டும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள மஞ்சள் துணிப் பைகள். படம்: ஊடகம் -

சென்னை: நெகிழி (பிளாஸ்­டிக்) பைக­ளின் பயன்­பாட்டை முற்­றி­லும் குறைக்­கும் வகை­யில், 'மீண்­டும் மஞ்­சப்பை' பிர­சா­ரத்தை மேற்­கொள்ள அரசு முடிவு செய்­துள்­ளது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நெகி­ழிப் பொருட்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரம் மூலம் மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அவர்­க­ளின் ஒத்­து­ழைப்­போடு நெகி­ழியை ஒழிக்க அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

ஒரு­முறை மட்­டுமே பயன்­படுத்­தி­விட்டு தூக்கி வீசப்­படும் 14 வகை­யான பிளாஸ்­டிக் பொருட் களுக்­குத் தமி­ழ­கத்­தில் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது. இருப்­பி­னும், பெரும்­பா­லான மக்­கள் விதி முறை­க­ளைப் பின்­பற்­று­வ­தில்லை.

இத­னால், மாநில அள­வில் துணிப்­பை­களை உப­யோ­கிக்­கும் வகை­யில் 'மீண்­டும் மஞ்­சப்பை' பிர­சா­ரத்தை மாசுக்­கட்­டுப்­பாட்டு வாரி­யம் சார்­பில் தொடங்க உள்­ள­தாக வனத்­துறை முதன்­மைச் செய­லா­ளர் சுப்­ரியா சாகு தெரி­வித்­துள்­ளார்.