சென்னை: சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட உள்ளது. அத்துடன், தேசிய அளவில் ஆண்டுதோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர கால உதவியை பொதுமக்கள் தயங்காமல் வழங்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஓர் ஆண்டில் ஒருவர் ஐந்து முறை இந்தப் பரிசுத்தொகையைப் பெற லாம் என்று கூறப்பட்டுள்ளது.