மழைநீரை அகற்றும்படி மக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்: மாநி­லம் முழு­வ­தும் கன­மழை, வெள்ள பாதிப்­பால் மக்­கள் பெரும் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர்.

தங்­க­ளது குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் தேங்­கி­யுள்ள நீரை அகற்­ற­வேண்­டும், இடிந்து விழுந்த வீடு­களைப் பார்­வை­யிட்டு உட­ன­டி­யாக அதி­கா­ரி­கள் அடுத்தகட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என ஆங்­காங்கே மக்­கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சாலை மறி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

உத்­தி­ர­மே­ரூர் அருகே வெவ்­வேறு கிரா­மங்­களில் கனமழையால் இரு வீடு­கள் இடிந்து விழுந்­தன. இந்த இடிபாடுகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல அதி­கா­ரி­கள் யாரும் வரா­த­தால், ஆத்­தி­ர­ம­டைந்த அப்­ப­குதி மக்­கள் சால­வாக்­கம்-திரு­முக்­கூ­டல் சாலை­யில் திடீர் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

சால­வாக்­கம் போலிசாரும் வரு­வாய்த்­து­றை­யி­னரும் மறி­ய­லில் ஈடு­பட்ட பொது­மக்­க­ளி­டம் சம­ர­சம் பேசி உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­ததை அடுத்து பொது­மக்­கள் கலைந்து சென்­ற­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் உள்ள தண்­ணீர்­கு­ளம், ராமா­பு­ரம் கிரா­மங்­களில் வசிக்கும் 1000க்கும் மேற்­பட்ட குடும்­பத்­தி­னர், தங்களது வீடு­களைச் சூழ்ந்துள்ள மழை­நீரை அகற்றக் கோரி ராமா­பு­ரம் பேருந்து நிறுத்­தம் அருகே சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

ஆவடியை அடுத்த சோராஞ்­சே­ரி­யில் உள்ள ஈசா ஏரிக்கு வரும் நீர்­வ­ரத்து கால்­வாயைத் தனி­யார் பள்ளி, செங்­கல்­ சூளை, தனி­யார் வீட்டு மனைப்­பி­ரிவு ஆகி­யவை ஆக்­கி­ர­மித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், கால்­வா­யில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­றக் ­கோரி அப்­ப­குதி மக்­கள் பருத்­திப்­பட்டு-அணைக்­கட்­டுச்­சேரி சாலைப் பகு­தி­யில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். பட்­டா­பி­ராம் போலிஸ் உதவி ஆணையர் வெங்­க­டே­சன் உள்­ளிட்­டோர் பேச்­சு­வார்த்தை நடத்தி போராட்­டத்தைக் கைவிடச் செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!