பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி தண்டோரா

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி தண்டோரா

1 mins read
6a699c10-7ada-4aa1-b00c-e5285c939056
தண்டோரா போட்டு தகவல் சொல்லும் ஊழியா். படம்: ஊடகம் -

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆற்றின் தரைப்பாலத்தைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அங்கு வசிக்கும் மக்களை ஊருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி ஊராட்சி நிா்வாகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது.

"சமுத்திரம் பகுதியில் வசிப்போா் அருகிலுள்ள தங்களது உறவினா்கள் வீட்டிற்குச் சென்று பாதுகாப்பாக தங்கவேண்டும். இல்லையெனில், அருகிலுள்ள சின்ன சமுத்திரம், கத்திக் காரன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடத்திற்குச் சென்று தங்கவேண்டும்," என்று அறிவுறுத்தப்பட்டது. ஆற்றுப் பகுதிக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டது.