நல்லபாம்புக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை

நல்லபாம்புக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை

1 mins read
879292b8-5977-4492-b13c-4b0f6848e02c
பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள். படம்: ஊடகம் -

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யில் கன­ம­ழை­யால் கால்­ந­டை­களும் வீதி­களில் வாழும் நாய், பூனை களும் இரை கிடைக்­கா­மல் தவிக் கின்­றன. இவற்­று­டன் பாம்­பு­களும் படை­யெ­டுத்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், சென்னை பாடி லூகாஸ் பகு­தி­யில் தேங்­கிய மழை நீரை வெளி­யேற்­றும் பணி நடந்து கொண்­டி­ருந்­த­போது, புத­ரில் இருந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று, மண் தோண்­டப் பயன்­படும் பொக்­லைன் இயந்­தி­ரத்­தில் சிக்கி வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த நிலை­யில் உயி­ருக்­குப் போரா­டிக்கொண்­டி­ருந்­தது.

இதை­ய­றிந்த வனத்­துறை அதி காரி­கள் பாம்பை மீட்டு, கிண்டி யிலுள்ள வனத்­துறை மருத்­துவ மனைக்கு எடுத்­துச் சென்­ற­னர்.

அந்­தப் பாம்­புக்கு மயக்க மருந்து கொடுத்து, 'ஆக்­சி­ஜன் மாஸ்க்' அணி­வித்து, அறுவை சிகிச்சை செய்து அதன் உயி­ரைக் காப்­பாற்றி யுள்­ள­னர் கிண்டி வனத்­துறை மருத்­து­வர்­கள். தற்­போது கண்­ணாடிக் குடுவையில் வைத்து அதன் உடல்­நிலை கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கிறது. பாம்­பைக் காப்­பாற்­றிய வனத்­துறை மருத்­து­வர்­களைப் பல­ரும் சமூக வலைத்­தளங்­களில் பாராட்டி வரு­கின்­ற­னர்.