தனித்தனி தீவுகளாக மாறி தத்தளிக்கும் குடியிருப்புகள்

தனித்தனி தீவுகளாக மாறி தத்தளிக்கும் குடியிருப்புகள்

3 mins read
8db10d2b-e9f8-4a7e-94eb-09f12930ca89
சென்னையில் திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் ஓடுகிறது. நீர்நிலைகளாக காட்சியளிக்கும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளன. படம்: இபிஏ -

செங்­கல்­பட்டு: தமி­ழ­கத்­தில் தலைநகர் சென்­னை­யின் புற­ந­கர் மாவட்­ட­மான செங்­கல்­பட்­டில் ஆக அதி­க­மாக 11 செ.மீ. அளவுக்கு மழை பெய்­துள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் புவி­ய­ர­சன் தெரி­வித்துள்­ளார்.

இரண்­டா­வது நாளா­கத் தொட ரும் கன­ம­ழை­யால் செங்­கல்­பட்டு மாவட்­டம் முழு­வ­தும் வெள்­ளத்­தால் சூழப்­பட்டு, குடி­யி­ருப்­பு­கள் அனைத் தும் தனித்­தனி தீவு­க­ளா­கக் காட்சி அளிப்பதாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இம்­மா­வட்­டத்­தில் 200க்கும் மேற்­பட்ட பகு­தி­கள் வெள்­ளம் சூழ்ந்து தீவு­க­ளாக மாறி­விட்­டதாக­வும் 20,000க்கும் மேற்­பட்ட வீடு­கள் நீரில் மிதப்­ப­தா­க­வும் கூறப்படுகிறது.

இத­னால், அங்கு வசிக்கும் மக்­கள் மீட்­புப் படையின­ரின் உத­வி­யு­டன் வீட்­டை­விட்டு வெளி­யேறி வரு­கி­றார்­கள். சிலர் உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளின் வீடு­களில் தஞ்­சம் அடைந்­துள்­ளனர்.

செங்­கல்­பட்­டில் உள்ள அனைத்து நீர்­நி­லை­களும் நிரம்­பி விட்ட நிலையில், பாலாறு, அடை­யாறு உள்­ளிட்ட ஆறு­க­ளில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து நேற்று 29,500 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது. இதனால், இந்த ஏரியை ஒட்டியுள்ள 18 கிராமங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், முடிச்சூர், பெருங் களத்தூர், ஊரப்பாக்கம், கூடு வாஞ்சேரி, செங்கல்பட்டு, நாவலூர், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தீவுகளாக மாறியுள்ளன.

மழை இன்னும் தொடர்ந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற அச்சம் பொதுமக்களிடம் மட்டு மின்றி அதிகாரிகளிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அனைத்துக்கும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித் துள்ளனர்.

"குமரிக்கடலையும் அதை ஒட்டி யுள்ள இலங்கை கடற்பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்கிழக்கு அரபிக் கடல், கேரளக் கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறா வளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்," என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த தொடர் மழையால் ெபரும் பாலான மாவட்டங்களில் ேநற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

 டிசம்பர் 2 வரை மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வியாழன் வரை தென்மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. இன்று 30ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாகையில் 10,000 ஏக்கர் பயிர்கள் நாசம்

தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள அரசு ஆயத்த நிலையில் இருந்துவருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.

"நாகை மாவட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ள 3,500 பேருக்கு உணவு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப் பட்டு வருகிறது. 10,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன," என்றாா் அமைச்சர்.

 குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

தென்காசியில் கனமழை பெய்துவருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.