உடல் பருமனாக சென்னை பெண்கள்

உடல் பருமனாக சென்னை பெண்கள்

1 mins read
422fbd3d-d088-4dec-83b7-0a581a6f82ac
-

புதுடெல்லி: இந்தியாவிலுள்ள பெருநகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கோல்கத்தா ஆகிய நகரங்களில் வசிக்கும் பெண்களை விடவும் சென்னை பெண்கள் அதிகள வில் உடல்பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தால் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேசிய குடும்பச் சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

மற்ற நகரங்களை விடவும் சென்னையில் அதிகளவில் பெண்கள் வசிக்கின்றனர். அதாவது, 1,000 ஆண்களுக்கு 1,037 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். அத்துடன், சென்னை நகரப் பெண்கள், உணவு முறை களை மாற்றிக்கொள்வதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை எனவும் ஆய்வு கூறியுள்ளது.