விமானப் பயணிகள் தொடா்ந்து கண்காணிப்பு: வெ.இறையன்பு

விமானப் பயணிகள் தொடா்ந்து கண்காணிப்பு: வெ.இறையன்பு

2 mins read
735cccfc-073e-46ac-9e35-bb9a4ddab987
-

சென்னை: 'ஓமிக்­ரான்' எனப்­படும் உரு­மா­றிய கொரோனா ெதாற்று தமி­ழக மக்­க­ளி­டம் பர­வா­மல் தடுக்­கும் வகை­யில், தமி­ழ­கத்­துக்கு வரும் பன்­னாட்டு விமா­னப் பய­ணி­கள் தொடர்ந்து அணுக்­க­மாகக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வர் என்று தலை­மைச் செய­லாளா் வெ.இறையன்பு கூறியுள்ளாா்.

"தமிழ்­நாட்­டில் 'ஓமிக்­ரான்' தொற்­றால் யாரும் பாதிக்­கப்­பட்ட தாக இது­வரை தெரிய வரவில்லை. இக்கிருமி மாநி­லத்­துக்­குள் நுைழயா­ம­லும் தொற்­றா­ம­லும் தடுக்க தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து விமான நிலை­யங்களி­லும் பரிசோதனைகளைத் தொடா்ந்து வரு­கி­றோம்.

"உரு­மா­றிய கொரோனா தொற்­றின் பாதிப்­பு­க­ளைத் தடுக்க தடுப்­பூசி மட்­டுமே சிறந்த ஆயுதமாக இருப்பதால், அனைத்து மாவட்ட ஆட்­சி­யா்­களும் பொதுமக்களி டையே தொடா்ந்து விழிப்­பு­ணா்வு ஏற்­ப­டுத்தி இரண்டு தவணை தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொள்ள அறி­வு­றுத்தவேண்­டும்," என்று அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்­ளார்.

அனைத்­து­லக விமான நிலை யங்­க­ளுக்கு தென்­ஆப்­பி­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய நாடு­கள், ஹாங்­காங், சீனா, இஸ்­ரேல், நியூ சிலாந்து, சிங்­கப்பூா், பிரே­சில், மொரீ­ஷி­யஸ் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து வரும் பய­ணி­கள் கண்­டிப்­பாக ஆா்டிபி­சிஆா் பரி சோதனை செய்து, நோய்த்தொற்­றில்லை என்ற முடிவு தெரிந்த பின்­னரே வீடு­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டுவா் என்­றும் இறை யன்பு கூறி­னார்.

இதற்கிடையே, பொது சுகா­தா­ரத் துறை இயக்­குநா் டாக்டா் செல்­வ­வி­நா­ய­கம் அனுப்­பிய சுற்­ற­றிக்­கை­யில், தனியாா், அரசு ஆய்­வ­கங்­களில் 'ஓமிக்­ரான்' கிரு­மி­யைப் பரி­சோ­திக்கும் முதல்­கட்ட ஆய்வு­களை மேற்­கொள்வதற்கு உத்­த­ர ­வி­ட்டுள்ளார்.

'ஓமிக்­ரான்' பாதிப்­பு­களை மூன்று மணி நேரத்­தில் கண்­டறி வதற்­கான ஆய்­வக வச­தி­களை அனைத்­து­லக விமான நிலையங்­கள் அமைந்­துள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நக­ரங்­களில் தமி­ழக அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன்மூலம் வெளி­நாட்­டில் இருந்து வரும் பய­ணி­க­ளின் மர­பணு­வில் ஏதே­னும் மாற்­றம் உள்­ளதா என­வும் கண்­கா­ணிக்­கப்­பட உள்­ளது.