50 ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய மாடக்குளம் கண்மாய்: விழாவாகக் கொண்டாடிய மக்கள்

50 ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய மாடக்குளம் கண்மாய்: விழாவாகக் கொண்டாடிய மக்கள்

1 mins read
761c608b-642a-4a4c-a3dc-5e8cdbc97aaa
மாடக்குளம் கண்மாய் நிரம்பியதைத் தொடர்ந்து விழா எடுத்த கிராம மக்கள். படம்: தமிழக ஊடகம் -

மதுரை: மதுரையில் அடைமழை பெய்த காலகட்டங்களிலும் கூட நிரம்பாமல் இருந்து வந்த மாடக்குளம் கண்மாய், இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பெய்துள்ள கனமழை யால் நிரம்பியுள்ளது.

இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுவட்டார கிராமத்து மக்கள் அருகில் உள்ள அய்யனார் கோயிலில் சிறப்பு பூசைகளைச் செய்தனர்.

கண்மாய் நிரம்பியதை மேள தாளத்துடன் பாரம்பரிய விழாவாகக் கொண்டாடினர். இந்நிகழ்வின்போது கரையோரம் நின்றிருந்த பெண்கள் மகிழ்ச்சியில் குலவையிட்டனர்.