கே. பழனிசாமி: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கே. பழனிசாமி: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு

2 mins read
762add61-0262-4f8a-84e9-2fe667bad348
-

சேலம்: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா வாழ்ந்த வேதா இல்­லம் என்ற கோயிலை மீட்­டெ­டுக்­கும் வகை­யில், உயர் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு எதி­ராக அதி­முக சார்­பில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­படும் என்று முன்­னாள் முதல்­வ­ரும் எதிா்க்­கட்­சித் தலைவரு­மான எடப்­பாடி கே.பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

சேலம் மாவட்ட அதி­முக அலு வல­கத்­தில் நகா்ப்­புற உள்­ளாட்­சித் தோ்தலுக்­கான விருப்ப மனுக்­க­ளைப் பெற்­றுக்­கொண்ட பின்­னர், அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான பழ­னி­சாமி செய்­தி­யா­ளா்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.

"மறைந்த ஜெய­ல­லிதா வாழ்ந்த இடம் அதி­முக தொண்­டா்­க­ளின் கோயி­லாக மதிக்­கப்­ப­டு­கிறது. அவா் வாழ்ந்த இல்­லத்தை பொது மக்­கள் அனை­வ­ரும் பாா்வையிட வேண்­டும் என்­ப­தற்­கா­கவே அர­சுை­டமை ஆக்­கி­னோம்.

"ஆனால், நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு எங்­க­ளின் விருப்­பத்­துக்கு நேர்­மா­றாக அமைந்து, அதி­முக தொண்­டா்­க­ளை­யும் பெரும் வேதனை அடை­யச்­செய்­துள்­ளது.

"நானும் ஒருங்­கி­ணைப்­பாளா் ஓ.பன்­னீா்செல்­வ­மும் இன்று நடக்க உள்ள செயற்­குழு கூட்­டத்­தில் தீர ஆலோ­சித்து மேல்­மு­றை­யீடு செய்­வோம்," என்றாா்.

ஒரு சில தினங்­க­ளுக்கு முன்பு தான், ஜெய­ல­லி­தா­வின் பல நூறு கோடி ரூபாய் மதிப்­பி­லான வேதா இல்­லத்­தின் சாவியை தங்­க­ளி­டம் மூன்று வாரங்­க­ளுக்­குள் வழங்­க­வேண்­டும் என்று கோரி, ஜெய­லலி­தா­வின் அண்­ணன் ஜெயக்­கு­மா­ரின் வாரி­சு­க­ளான ஜெ.தீபா­வும் ஜெ.தீபக்­கும் உயர் நீதி­மன்­றத் தீர்ப்பு நகலை இணைத்­துச் சென்னை மாவட்ட ஆட்­சி­யர் ஜெ.விஜயா ராணி­யி­டம் மனு அளித்­தி­ருந்­த­னர்.

ஜெய­ல­லி­தா­வின் இல்­லத்தை அரசு கைய­கப்­ப­டுத்­தி­யது செல்­லாது எனத் தீர்ப்­ப­ளித்த உயர் நீதி­மன்­றம், சட்­டப்­படி வாரி­சு­க­ளான தீபா, தீபக் ஆகி­யோ­ரி­டம் இல்­லத்தை மூன்று வாரங்­க­ளுக்­குள் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், "ஜெய­ல­லிதா வாழ்ந்த கோயிலை நிச்­ச­ய­மாக மீட்­டெ­டுப்­போம்," என்று பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.