சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும் 9ஆம் தேதி வெளியிடப்படும் என மாநிலத் தேர்தல் ஆணயைம் அறிவித்துள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யவேண்டிய வசதிகள், பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

