பாலியல் பாடம்: அரசுப் பள்ளி ஆசிரியர் இடை நீக்கம்

பாலியல் பாடம்: அரசுப் பள்ளி ஆசிரியர் இடை நீக்கம்

1 mins read
201d0939-01f3-44d4-924c-74e3f679fffc
-

கரூர்: கரூர் அருகே அர­சுப்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஆபா­ச­மா­க­வும், பாலி­யல் உணர்வை தூண்­டும் வகை­யி­லும் பாடம் நடத்­திய புகா­ரில் அறி­வி­யல் ஆசி­ரி­யர் தற்­கா­லி­க­மாக பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

கரூர் மாவட்­டம் பாக­நத்­தம் அரசு நடு­நி­லைப் பள்­ளி­யில் அறி­வி­யல் ஆசி­ரி­ய­ராக வேலை செய்தவர் பன்­னீர்­செல்­வம், 46.

இவர் இரு­பாலின மாண­வர்­கள் பயி­லும் வகுப்­ப­றை­யில் அறி­வி­யல் பாடத்தை மிக­வும் கொச்­சை­யான வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்தி, பாலி­யல் உணர்­வு­க­ளைத் தூண்­டும் வகை­யில் நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து கல்­வித்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் மாண­வர்­கள் புகார் அளித்­த­னர்.

விசா­ர­ணை­யில், ஆசி­ரி­யர் பன்­னீர்­செல்­வம் பாலி­யல் உணர்­வைத் தூண்­டும் விதி­மா­கப் பாடம் நடத்­தி­ய­தும் பாலி­யல் சம்­பந்­த­மான கேள்­வி­களை தேர்­வாக வைத்­த­தும் தெரி­ய­வந்­தது.